பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதில் உடல் எடை அதிகரிப்பது, இரத்த அழுத்தம், தசைப் பிடிப்புகள், வெள்ளை வெளியேறுதல், மார்பகங்களில் இருந்து நீர்மம் வெளியேறுதல் மற்றும் உடல் வலி போன்றவை பொதுவானவை. இவைத் தவிர குழந்தை வளர்வதால், வயிறு பெரிதாகும் போது சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படும்.
அது மட்டுமின்றி, அதிகப் படியான சோர்வையும் உணர்வார்கள். மேலும் கூந்தல் உதிர்தல், மனநல மாற்றம், களைப்பு போன்றவையும் குறிப்பிடத் தக்கவை. அதேப் போன்று காலையில் அதிகப் படியான சோர்வு, குமட்டல், மயக்கம், தலைவலி, உடல் வலி மற்றும் இன்னும் பலவற்றையும் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திப்பார்கள்.
முதுகு வலி
வயிற்றில் சிசு வளர வளர, அதனை முதுகு தாங்குவதால், கர்ப்பிணி களுக்கு முதுகு வலி உண்டாகும்.
குமட்டல்
காலை சோர்வு, குமட்டல், வாந்தி, மனநிலை மாற்றம் போன்ற வற்றை பெண்கள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உணர்வார்கள். மேலும் சில கர்ப்பிணி களுக்கு இத்தகைய பிரச்சனை கர்ப்ப காலம் முழுவதும் இருக்கக் கூடும்.
மார்பகங்களில் நீர்மம் வெளியேறுதல்
கர்ப்ப காலத்தில் பால் சுரக்க ஆரம்பிப்பதால், சில நேரங்களில் மார்பகங்களில் இருந்து நீர்மம் போன்ற திரவம் வெளியேறும். அதுவும் முதல் மூன்று மாத காலத்திலேயே ஆரம்பமாகிவிடும்.
இரத்தப்போக்கு
சில கர்ப்பிணிகளுக்கு ஈறுகளில் இருந்தும் இரத்தம் வெளியேறும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பற்களில் பிரச்சனை ஏற்படுவது சாதாரணம். அதே சமயம், சிலருக்கு இரத்தப்போக்கும் முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடும். இப்படி இருந்தால், உடனே மருத்துவரை அணுகி, அதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
வெள்ளைப் படுதல்
கர்ப்பமாக இருக்கும் போது வெள்ளைப் படுதல் அதிக அளவில் இருக்கும். அதிலும் இறுதி காலத்தில் அதிகமாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் கருப்பையானது மிகவும் மென்மையாகிறது.
தசைப்பிடிப்புகள்
இது அனைத்து பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதிலும் கால், வயிறு போன்ற இடங்களில் அதிகமாக தசைப்பிடிப்பு ஏற்படும். குறிப்பாக இரவு நேரங்களில் தான் ஏற்படும்.
அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்

கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாவதால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற நேரிடும்.
தூக்கமின்மை
தூக்கமின்மை ஏற்படுவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் தான் காரணம். அதே சமயம், உடல் வலியினாலும், தூங்குவதில் கஷ்டம் இருக்கும்.
சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகள்
ஸ்ட்ரெட்ச் மார்க், தளர்ந்த மற்றும் வறட்சியான சருமம், கூந்தல் உதிர்தல் போன்ற சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளை கர்ப்பிணிகள் நிச்சயம் சந்திப்பார்கள்.
மலச்சிக்கல்
ஹார்மோன்களின் மாற்றத்தினால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் மருத்துவர்கள் கர்ப்பிணிகளிடம் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் தண்ணீரை அதிகம் பருக சொல்கிறார்கள்.
தலைவலி
சில பெண்கள் கர்ப்பத்தின் சில வாரங்களுக்கு அதிகப்படியான தலை வலிக்கு உள்ளாவார்கள். இதற்கு ஹார்மோன், வாந்தி எடுக்கும் போது கொடுக்கப்படும் அழுத்தம் தான் காரணம். இதனால் தலை வலி மட்டுமின்றி, தொண்டை வலியும் ஏற்படக்கூடும்.
செரிமான பிரச்சனை
ஹார்மோன்கள் மற்றும் கருவின் வளர்ச்சியினால் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி செரிமான பிரச்சனை ஏற்பட்டு, நெஞ்செரிச்சலை சந்திக்ககூடும்.