ஆண் எப்போது அழகாகிறான்?

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்ற பார்க்கும் போது.
ஆண் எப்போது அழகாகிறான்?
2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும், தன் வீரத்தையும். திமிரையும் ஓரங்கட்டி விட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது 6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர் ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசா விட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவு களையும் தெரிந்து வைத்திருக்கும் போது. சுயநலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 8, April 2025