ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்த !

Fakrudeen Ali Ahamed
0
மனிதனுக்கு நேய உணர்வு அவசியம். எப்படி தன்னிடம் உள்ள பழுத்த பழங்களை மரம் பிறருக்காக கொடுக்கிறதோ, அதுபோல ஒவ்வொரு வரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்கும் குணமுடை யவர்களாக இருக்க வேண்டும். எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். 
ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்த

நல்ல எண்ணங்கள், நல்ல விளைவு களைம், தீய எண்ணங்கள் தீய விளைவு களையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை வடிவமைக் கிறது. கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும். 

அனாவசியக் கவலை களுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும் படியாகி விடும். 

இதை புரிந்து கொள்கிற வரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை. நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடை கடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? 

ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிது மில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது. சவால் என்பது சாதாரணமல்ல… ஒரு சவாலை நீங்கள் எதிர் கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினை களையும் எதிர் கொள்ள வேண்டி யிருக்கிறது. 

சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிற போது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்.. நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிற போது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். 

 நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்க படுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது. 

வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக் கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங் களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள். 

எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ண மிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது. ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். 

பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம். ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்… ஆனால் அது விதைக்கபட்டு விடுகிற போது… அது செல்வத்தையும், ஆரோக்கிய த்தையும், மகிழ்ச்சியைம் கொண்டு வந்து விடுகிறது. 
மகிழ்ச்சியைப் பெருக்க நமக்குக் குறுக்கே நமது நாக்கு வந்து தடுக்கும். எடுத்த வீச்சுக்குச் சுடுசொல் பேச வைப்பதும் இந்த நாக்குத் தான். நரம்பில்லா நாக்கால கண்டபடி திட்டிக் கொட்டிப் போட்டு, உள்ள நல்லுறவு களையும் முறித்துப் போட்டு ஈற்றில் துயருற்று என்ன பயன்? 

நல்லுறவைப் பேண அமைதி (மௌனம்) பேணலாம். அதாவது வாய்க்குப் பூட்டுப் போடலாம். “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்னும் முதுமொழிக்கமைய அன்பாகப் பேசி எதிரியையும் எம்பக்கம் இழுக்கலாம் என்றால் அன்பு மொழி பேசி நல்லுறவைப் பேணலாமே! 

பேசுமுன் ஒன்றுக்குப் பலமுறை எண்ணி இன்சொல் பேசலாம்; பிறர் உள்ளம் நோகாது நல்லதைப் பேசலாம். எனவே, நாக்கை உள்ளத்தாலே கட்டுப் படுத்தலாம். வாய்ப் பூட்டு நல்ல இனிய உறவுகளைத் தரும். நாளெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)