விபச்சாரி எனத் திட்டிய கணவரை கொள்வது குற்றமல்ல?

Fakrudeen Ali Ahamed
0
விபச்சாரி எனத் திட்டிய கணவரை மனைவி கொல்வது கொலை ஆகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
விபச்சாரி எனத் திட்டிய கணவர்
தமிழகத்தின் ஊட்டியைச் சேர்ந்த ஒரு பெண் குடும்பத் தகறாறில் கணவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த மற்றொருவரின் துணையுடன் கொன்று விட்டதாக 2002ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
இந்த வழக்கில் கொல்லப் பட்டவர் தன் மனைவியை விபச்சாரி என திட்டியதாகவும் அத்தடன் தன் 17 வயது மகளையும் அவர் விபாச்சாரி ஆக்குவதாக குற்றம் சாட்டிய தாகவும் பெண்ணின் தரப்பில் கூறப்பட்டது. 

கொல்லப் பட்டவர் மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை யிட்டுக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் வந்து சமாதானம் செய்ய முயன்றார் என்றும், 
 
அதைக் கேட்காமல் தொடர்ந்து மனைவியை வசை பாடியவரை அந்த பக்கத்து வீட்டுக்காரரும் மனைவியும் வாயில் துணியை வைத்து அடைத்த போது, அவர் உயிரிழந்து விட்டார் என்றும் கூறப்படு கிறது. 

கணவர் இறந்து விட்டதை அறிந்த அந்தப் பெண் பக்கத்து வீட்டுக்கார ருடன் சேர்ந்து கணவரின் உடலை தீயிட்டு எரித்துள்ளார்.
குரங்கை விழுங்கும் ராட்சத பல்லி வைரல் வீடியோ
 ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் கணவரைக் கொன்ற பெண் குற்றவாளி என தீர்ப்பு வந்த நிலையில், இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது ஜனவரி 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றமும் அந்தப் பெண்ணையும் அவருக்குத் துணையாக இருந்த பக்கத்து வீட்டு நபரையும் குற்றவாளி என 
 
தீர்ப்பு வழங்கினாலும், விபச்சாரி எனத் திட்டிய கணவரை கொன்றது கொலை ஆகாது எனவும் குறிப்பிட்டது. 
 
நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சாந்தனா கௌடார் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கிய இத்தீர்ப்பில், 
 
இந்திய சமூகத்தில் எந்த பெண்ணும் கணவரால் 'விபச்சாரி' என்று கூறப்படுதவதை சகித்துக் கொள்ள முடியாது.
சுங்க சாவடியில் தாக்கிய நபரை சரமாறியாக தாக்கிய இளம்பெண்.. வைரல் வீடியோ !
அதுவும் தன் மகள் முன்னால் அப்படி கூறப்படுவதை சகிக்க முடியாது. கணவர் அப்படி பேசியதால் தூண்டப்பட்டு கொலை செய்வது கொலை ஆகாது." என்று கூறி யிருந்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)