குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மது அருந்தும் பழக்கம் உடைய தம்பதிகள் ஒற்றுமை யாக இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
கணவன் மனைவி உறவு குறித்த ஆய்வு ஒன்றில், ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் கணவன்- மனைவி ஆகியோர் மிகுந்த நெருக்கத்துடன் இருப்பர் எனப்படுகிறது.
விநோதமாக உள்ள இந்த ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட இடைவெளி யில் அளவாக மது அருந்தும் பழக்கம் கொண்ட தம்பதிகள் கடைசி வரை ஒற்றுமையாக வாழ்வது தெரிய வந்துள்ளது.
அதே சமயத்தில் அளவுக் கதிகமாக மது குடிக்கும் தம்பதிகள் அடிக்கடி சண்டை போடுவது தெரிய வந்துள்ளது.
மேலும் கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மதுப்பழக்கம் அல்லாதவ ராகவும் மற்றொருவர் மது அருந்துபவரா கவும் இருந்தால் அவர்களுக்குள் சண்டை வர வாய்ப்புள்ள தாம்.
ஆனால் மதுவை கைவிட்ட தம்பதிகள் மிகுந்த புத்துணர்ச்சி யுடனும் ஆரோக்கி யத்துடனும் வாழ்வது திண்ணம். எனவே இப்பழக்கத்தை கைவிடுவது ஆரோக்கி யத்துக்கு மட்டுமல்லாமல் உறவுக்கும் நல்லது.