எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மும்பை பெண் கான்ஸ்டபிள் !

Fakrudeen Ali Ahamed
0
மும்பை காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் கடம் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 130 கிலோ எடை கொண்டிருந்த கடம் தற்போது 25 கிலோ எடையை அறுவை சிகிச்சை மூலம் குறைத்துள்ளார்.
எடை குறைப்பு அறுவை சிகிச்சை
மும்பை போரிவ்லி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் கான்ஸ்டபிள் ருபாலி கடம் (30) எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். 132 கிலோ எடை கொண்டிருந்த கடம் தற்போது 25 கிலோ எடையை அறுவை சிகிச்சைமூலம் குறைத்துள்ளார்.

இரண்டு குழந்தை களுக்குத் தாயான கடம், மும்பைக்கு மாற்றலாகி வந்த போது துரித உணவுப் பழக்கம் காரணமாக எடை போட்டார். ஒருமுறை கைதிகளை கொண்டு செல்லும் போது எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ மனையைக் கண்டார். 

அங்கிருந்த மருத்துவர் களிடம் தன் அதீத எடைகுறித்து தெரிவித்தார். மருத்துவர்கள் ஸ்லீவ் அறுவை சிகிச்சை மூலம் 25 கிலோ வரை எடையை குறைக்கலாம் என்றனர். இதற்கு ரூ. 50,000 வரை செலவானது.

எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் அழகு சிகிச்சை பட்டியலில் இடம் பெறுவதால் இத்தொகையை காவலர் காப்பீட்டில் இருந்து அவரால் பெற இயலவில்லை. 

தானே பணம் திரட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இன்னும் ஆறு மாதங்களில் தொடர் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி மூலம் படிப்படியாக 80 கிலோ வரை உடலை குறைக்க உள்ளார் கடம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)