பெண்கள் சேலை கட்டுவதால் கிடைக்கும் சில பலன்கள் !

Fakrudeen Ali Ahamed
2 minute read
0
சேலை என்றால் என்ன என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த தலைமுறை பெண்கள் சேலை அணிவதில் அதிகம் விருப்பம் காட்டுவ தில்லை. 
பதிலாக சுடிதார், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிய ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான சேலை தற்போது வழக்கொழிந்து போக ஆரம்பித்துள்ளது.
 
சேலை விலை மற்றும் பராமரிப்பு காரணமாக சேலை அணிவதை சில பெண்கள் தவிர்த்து வருகின்றனர். சேலை அணிவதால் தாய்மார்க ளுக்கு ஏற்படக் கூடியது சங்கடம் குறைகிறது.
சேலை பொது இடங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க உதவுகிறது. மற்ற எந்த ஆடையும் இந்த பலனை தராது என்பது தான் உண்மை. மேற்கத்திய நாட்டு ஆடைகள் நம் மானத்தை காக்கிறது. 
 
ஆனால் உடல் நலத்தை காக்கிறதா? நிச்சயம் ஜீன்ஸ், சுடிதார், டீ சர்ட் போன்ற உடைகள் உடல் ஆரோக்கியத் திற்கு நல்லதல்ல.

இந்த உடைகளில் இருந்து கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம். மற்ற ஆடைகளை விட சேலையில் பெண்கள் மிகவும் அழகு மற்றும் நாகரீகமாக தோன்றுகிறார்கள். 
ேலை கட்டிய பெண்களுக்கு மற்ற பெண்களை விட வன்கொடுமை குறைவாக நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?. உடலோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் சேலை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காட்டன் சேலை தான் பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. சேலை கட்டுவதால் இடுப்பு வெளியே தெரியும். இடுப்பு பகுதி பிரம்மஸ்தானம் ஆகும். பிரம்மஸ்தானம் வெளியே தெரியும் போது உடல் மற்றும் மனதிற்கு ஆற்றல் கிடைக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 5, April 2025