உஷாரய்யா உஷாரு.. இந்த பொருட்கள் வீட்ல இருக்கா? ஈஸியா தீப்பிடிக்குமாம் !

Fakrudeen Ali Ahamed
வீட்டில் கிச்சனைத் தவிர்த்து உங்களுக்கு தெரியாம லேயே இருக்கும் எளிதாக தீப்பிடிக்க கூடிய பொருட்கள்.
நெயில் பாலிஸ் நீக்கி:

நெயில் பாலிஸ் நீக்கியில் அசிடோன் உள்ளது. இது எளிதாக தீப்பிடிக்க கூடிய பொருள். இதை பயன்படுத்து வதை தவிர்ப்பது நல்லது லாண்ட்ரி பொருட்கள்:
பெரும் பாலான லாண்ட்ரி பொருட்கள் எளிதில் தீப்பிடிக்க கூடியவை, அதனால் தான் அதை பாதுகாப்பான இடங்களி லும், தீயில் இருந்து தூரமாக வைக்க வேண்டும்.

சானிடைஸர்:
சானிடைஸரில் ஆல்கஹால் கலந்திருப்ப தால், குறைந்த வெப்ப நிலையில் கூட எளிதாக தீப்பிடிக்க கூடிய பொருட்களில் ஒன்று.

சமையல் எண்ணெய்:

சமையல் எண்ணெய்யை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கவனிக் காமல் விட்டு விட்டால், தீப்பிடிக்கும். 
இது தான் வீட்டில் தீப்பிடிக்க முக்கிய காரணத்தில் ஒன்றாக உள்ளது.

அழகு சாதன பொருட்கள்:

டியோடரண்ட், ஹேர் ஸ்ப்ரே போன்ற அழகு சாதன பொருட்களில் தீப்பிடிக்கக் கூடிய நிறைய வேதிப் பொருட்கள் உள்ளது. 
ஜன்னல் ஓரத்தில் வெயில் படும் இடத்தில் வைத்தால் கூட இவை வெடிக்கும் தன்மை கொண்டது.

மாவு:
நெருப்பு படும் படி வைத்தால் மாவு, பால் பவுடர், மிளகாய் உள்ளிட்டவை எளிதாக தீப்பிடிக்கும்.

மற்ற பொருட்கள்:

இவைத் தவிர ஷூ பாலிஸ், பிங் பாங் பந்துகள், அந்துருண்டை, சுத்தீகரிப்பு பொருட்கள் என மற்ற பொருட்களும் எளிதாக தீப்பிடிக்கும் பொருட்களாகும்.
Tags: