அழகு என்பது ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் பொதுவானது. எல்லோரும் அழகான வர்கள் தான். எமக்கு இறைவன் மற்றும் தாய் தந்தையரால் கிடைக்கப் பெற்ற இந்த இந்த அழகை பாதுகாப்பது எம் கடமை தானே.
இன்று ஒரு முக்கியமான விடயத்தை பற்றி பார்க்கலாம். கொஞ்சம் உடல் எடை அதிகரித்து விட்டால் போதும். தொடையில் சதை பெருத்து விடும். நடக்கும் போது தொடையோடு தொடை உரச ஆரம்பித்து விடும். அது சில நேரம் புண்ணாகி விடும். அதன் பின் உள்ளாடை அணிவதே கஷ்டமாகி விடும்.
இது எல்லோரு க்கும் வழக்கமாக நடப்பது தான் தொடை உரச ஆரம்பித்து பின் புண்ணாகி அந்த இடம் கறுப்பாகி விடும். எந்த வெள்ளை காரராக இருந்தாலும் தொடை இடுக்கு கறுப்பாக தான் இருக்கும். இதற்கு தீர்வு என்ன ? நாம் இதற்கு பல கிரீம்கள் பாவிப்போம் ஆனாலும் பலன் கொடுத்ததாக இல்லை. இதற்கு தீர்வு இயற்கையாக உள்ளது.
வீட்டில் இருக்கும் சின்ன சின்ன விடயங் களை வைத்து நீங்களே தீர்வு காணலாம். எப்படி? சரி, இப்போது உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!
எலுமிச்சை சாறு
உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அப்பகுதியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நாளடைவில் கருமையாக இருக்கும் இடத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை கருமையாக உள்ள உள் தொடையில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியும்.
பாடி லோசன்
தற்போது கடைகளில் பலவிதமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் கிடைக்கின்றனர். அவற்றில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் கலந்த க்ரீம்களை வாங்கி முழங்கை, கால், உள் தொடை ஆகிய இடங்களில் தடவினால், அவை சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, கருமையையும் விரைவில் போக்கும்.
பால் பவுடர்
தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை உள் தொடையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் பவுடர்
உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம்.
சந்தனம்
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உள் தொடையில் இருக்கும் கருமை நீங்கி, பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.