மன அழுத்தம் அதிகமானால் முதுகு வலி உண்டாகும் !

Fakrudeen Ali Ahamed
முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள்.
தொடர்ந்து புகை பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத் தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்தும்.

முதுமை பருவத்தை எட்டும் போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும் முதுகு வலியால் அவதிப்பட நேரிடும்.

மனஅழுத்தமும் முதுகு வலியை ஏற்படுத்தும். மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகும் போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்து விடும்.

மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம் !

முதலில் முதுகு வலி குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியின் தீவிரம் அதிகமாகும்.
உடல் எடையை கட்டுக் கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களில் பெரும் பாலானோர் ஜிம்முக்கு சென்று அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

அதற்காக இப்போது நிறைய பேர் வீடுகளிலேயே சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கி விட்டார்கள்.

அந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளா விட்டால் முதுகு தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். தசைகளின் செயல்பாடு அளவுக்கு அதிகமாகும் போது முதுகு வலி தோன்றும்.

உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக் கப்பட்டிருக் கிறது. 
அதிக எடை அல்லது உடல் பருமனாக இருக்கும் போது அந்த கூடுதல் எடையை தாங்கு வதற்கு முதுகெலும்பு கடினமாக உழைக்க வேண்டி யிருக்கும்.

இறுதியில் எலும்பு தசைகள் சேதமடைந்து முதுகு வலியை ஏற்படுத்தி விடும். இரு கால்களின் நீளத்தில் வேறுபாடு கொண்டவர் களும் முதுகு வலியால் பாதிக்கப் படுவார்கள்.

எப்போதும் காதுக்குள் இரைச்சல் ஏற்பட காரணம் என்ன?

கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால் கூட பாதிப்பை ஏற்படுத்தி விடும். கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.

தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகு வலிக்கும் தொடர்பு இருக்கிறது. காயங்கள் வலியை ஏற்படுத்தும் போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகும்.அது வலியை அதிகப்படுத்தி விடும்.
Tags: