மழைக்காலம்
மற்றும் பனிக் காலம் என்றாலே, பலவிதமான நோய்களும் குழந்தை களைக் குறி
வைக்கும்.
இதிலிருந்து அவர்களைக் காப்பதற்கு ஏற்ற உணவுகளைப் பற்றி இங்கே
விளக்குகிறார், தேனியைச் சேர்ந்த குழந்தைநல சிறப்பு மருத்துவர்
அருள்குமரன்.
”மழை, பனிக்காலத்தில் குழந்தை களுக்கு சில வகை உணவுகள் காரண மாகவும் சளி, காய்ச்சல் போன்ற சிறுசிறு தொல்லைகள் வரலாம்.
எனவே,
கூடுதல் கவனத்துடன் அவர்களின் உணவுப் பட்டியலை தயார் செய்வது நல்லது.
1 2
வயதுக் குழந்தை களுக்கு காரம் சேர்த்த உணவுகளைத் தவிர்க்கலாம்.
காலை
வேளையில் பாலை விட, நவதானியங் களால் தயாரிக்கப்பட்ட சத்துமாவு கூழ் சிறந்த
ஊட்ட சத்து பானமாக இருக்கும்.
காலை 11 மணியளவில் கேரட்,தக்காளி போன்ற சூப்
வகைகளைக் கொடுத்தால் உடலுக்கு புத்துணர்வு கொடுப்பதுடன், பசியையும்
தூண்டி விடும்.
மதியத்தில் நெய் கலந்த பருப்புசாதம்
ஏற்றது. நெய் சேர்ப்பதால் பனியினால் ஏற்படும் சரும வறட்சியைத் தவிர்க்கலாம்.
மாலை 4 5 மணி வாக்கில் தோல் நீக்கிய ஆப்பிள், மாதுளை போன்ற
பழச்சாறு களைக் கொடுக்கலாம்.
மாதுளைச் சாற்றை வடிகட்டி
தரவேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
இப்படி தயாரிக்கப்படும் பழச்சாறுகள்
ஐஸ் இல்லாமல் கொடுக்கப் படுவதோடு, வீட்டிலேயே தயாரித்துக் கொடுப்பது
முக்கியம்.
இரவு வேளையில் எளிதில் செரிக்கக் கூடிய இட்லி,
இடியாப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகளைக் கொடுக்கலாம்.
காய்ச்சி
ஆறவைத்த குடிநீரை வடிகட்டி கொடுப்பதன் மூலம் நீரினால் ஏற்படும் தொற்றுகளைத்
தவிர்க்கலாம்.
5 வயது வரையிலான குழந்தை களுக்கு சளி,
இருமல், தும்மல், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்க…
நீர்க்காய்கள், சிட்ரஸ் வகை பழங்கள் போன்ற குளிர்ச்சித் தன்மையுடைய
உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில்
பொரிக்கப் பட்ட உணவுகள், பதப்படுத்த பட்ட உணவுகள், ஆயத்த உணவுகள்,
பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்யப்பட்ட உணவு களையும் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக எந்த வயதுக் குழந்தையாக இருந்தாலும், சமைத்த மூன்று மணி
நேரத்துக்குள் உணவைக் கொடுத்து விடுவது நல்லது.
அசைவ
உணவுகளைக் காலை, மதியம் கொடுக்கலாம். செரிமானக் கோளாறுகள் வரும்
என்பதால், இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குளிர்ந்த நீர்,
குளிர் பானங்கள் மழைக் காலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் வேண்டவே
வேண்டாம்!”