நிறைய மக்கள் சைவ உணவு களால் கூந்தல் வலு விழக்கிறது என்று நினைக் கின்றன. உண்மையில் சைவ உணவு களால் கூந்தலில் பல பிரச்சனை கள் ஏற்படு கின்றன.
ஆனால் எப்படியோ அந்த சைவ உணவு களால் இதயம் ஆரோக்கி யத்துடன் இருப்பதோடு, உடல் எடை குறைகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.
அதேப் போல் ஒரு சில சைவ உணவு களாலும் கூந்தல் ஆரோக்கி யத்துடன் இருக்கும்.
சைவ உணவுகள் சில வற்றால் கூந்தல் நன்கு வலு வடைவந்து, கூந்தல் உதிர்தல் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
இன்றைய காலத்தில் மாசடைந்து சுற்றுசூழல் காரணமாக கூந்தலில் பல பிரச்சனை கள் ஏற்படுகின்றன.
ஏன், அந்த பிரச்சனை களால் வலுக்கைத் தலை கூட வருகிறது.
சொல்லப் போனால் கூந்தலை வைத்தே உடலின் ஆரோக்கி யத்தைப் பற்றி சொல்லலாம்.
நீங்கள் ஆரோக்கி யத்துடன் இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கி யத்துடன் எந்த பிரச்சனை யுமின்றி இருக்கும்.
இல்லை யெனில் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறட்சி போன்றவை ஏற்படும்.
இவை யெல்லாம் வருவதற்கு காரணம், உடலில் போதிய சத்துக்கள் இல்லாததே ஆகும்.
ஆனால் தற்போது அத்தகைய சத்துக்கள் அனைத்தும், சைவ உணவு களில் உள்ளன.
அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக் களான ஜிங்க், வைட்டமின் சி, புரோட்டீன் போன்றவை உள்ள உணவுகளை சாப்பிட் டாலே, கூந்தலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.
இப்போது அந்த சத்துக்கள் எந்த உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளன என்பதைப் பார்ப்போமா
சோயா பீன்ஸ்
கூந்தல் பொதுவாக கெராட்டீன் என்னும் புரோட்டீ னால் தான் உருவானது.
அதனால் தான் கூந்தல் உதிர்ந்தால் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று சொல் கின்றனர்.
ஏனெனில் அவை கூந்தல் வளர்ச்சியை அதிகரிப் பதோடு, பழு தடைந்த முடியை சரிசெய்கிறது.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந் துள்ளது. இவை கூந்தலை விரைவில் வளரச் செய்கிறது.
மேலும் கால்சியம் சத்தும் அதிக அளவில் உள்ளது.
இதனால் கூந்தலின் வேர்கள் நன்கு வலு வடையும் மற்றும் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக வைக்கிறது.
ப்ரௌன் அரிசி
இந்த வகையான அரிசியில் காப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
மேலும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ள இந்த அரிசியை அதிகம் உணவில் சேர்த்தால், கூந்தல் நன்கு ஆரோக் கியமாக இருக்கும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை காய்கறி களான பசலைக் கீரை, கடுகு கீரை போன்ற வற்றில் கூந்தலுக்கு தேவையான இரும்புச் சத்து நிறைந் துள்ளது.
அதிலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள், இரும்புச் சத்துக்களை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களைப் பற்றி சொல்லவே வேண்டிய தில்லை. ஏனென்றால் அதில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
ஏனெனில் வைட்டமின் சி கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. கொலாஜென் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பொருள்.
சீஸ்
வலு விழந்து இருக்கும் முடியை சரி செய் வதற்குத் தேவையான புரோட்டீன் சீஸில் அதிகம் உள்ளது.
அது மட்டு மல்லாமல், அதில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர் தலை தடுக் கலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸில் இருக்கும் இரும்பு சத்தை உடலானது எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.
மேலும் இதில் எளிதில் கிடைக்காத பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.
கொண்டைக்கடலை
பருப்பு வகைகளில் ஒன்றான கொண்டைக் கடலையில் அதிக அளவில் ஜிங்க் உள்ளது. இது ஸ்கால்ப்பில் பொடுகு ஏற்படாமல் தடுப்பதில் சிறந்தது.
அதிலும் இதில் உள்ள கனிமச் சத்துக்கள் பொடுகு வராமல் பாது காப்பதில் சிறந்தது.
எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.