உடலுக்கு ஆபத்தை தரும் அழகு சாதன பொருட்கள் !

Fakrudeen Ali Ahamed
இயற்கை யாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகு படுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு 


பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல் நலத்திற்கே ஆபத்தாக விளை கின்றதாம்.

கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங் களுக்கு பயன் படுத்தப்படும் 

நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகி க்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் 

தினசரி 500 க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக் கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே: 

இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற் காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப் படுகின்றன வாம்.

அதில் சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், பாரோபிளின், கிளைசால் போன்றவை ஆபத்தா னவை என்கின்றனர் மருத்துவர்கள்.


இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்து வர்களின் எச்சரிக்கை.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயனங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயனங்கள் மிகவும் ஆபத்தா னவை.

அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹோர்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக் கூடுமாம். 

மேலும் இந்த ரசாயனங் களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்: 

கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப் படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்து வர்களின் அறிவுரை.

ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்ப டுத்தப்படு கின்றனவாம். 

அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாம்.

இது புற்றுநோய், குழந்தை யின்மை, ஹோர்மோன் கோளாறுகள், உடலின் உள் பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்ற வைகளை ஏற்படுத்து கின்றனவாம்.

கன்னக் கதுப்பு: 

கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகி க்கும் ரூஜ் 16 வகை ரசாயனங் களை உள்ளடக் கியுள்ளது. 

இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்து மாம்.


கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹோர்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்: 

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாய னங்கள் கலக்கப்படு கின்றன. 

இதிலுள்ள பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, 

நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்று நோய்க்கான காரணிகள் ஏற்படக் கூடும்.

வாசனை திரவியங்கள்: 

கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி விடும். இதில் 15 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக் கூடியது, 

தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும். உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாய னங்கள் உள்ளன.

இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹோர்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள் நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படு கின்றன.


இவை குழந்தை யின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறை பாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக் கின்றனர்.

மேலும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைப் பவர்கள், 

 ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக் கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர்.
Tags: