நீயா...நானா?’-ல பேசினதுக்காக மீம்ஸ்? - ஷாலின் !

Fakrudeen Ali Ahamed
விஜய் டி.வி, ’நீயா... நானா?’ நிகழ்ச்சியில் பேசிய குற்றத்துக் காக மீம்ஸ் கிரியேட்டர் களால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக் கிறார் சமூக ஆர்வலர் ஷாலின் மரிய லாரன்ஸ். 

'அந்த நிகழ்ச்சியில் பேசியவர் களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டுமே குறி வைத்துத் தாக்கு கிறார்கள்.

அடித்தட்டு மக்களுக் காக நான் செய்கின்ற நல்ல காரியங்கள் அனைத்தும், 

இந்த மீம்ஸ் கிரியேட்டர் களால் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது' என வேதனைப்ப டுகிறார் ஷாலின்.

சென்னையைப் பூர்வீக மாகக் கொண்ட ஷாலின் மரிய லாரன்ஸ், பிட்னஸ் நிறுவன த்தில் மார்க்கெட்டிங் மேலாளராக இருக்கிறேன். 

இது தவிர, திருநங்கை களின் வளர்ச்சி, அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் நூலகம் அமைப்பது,

சமூகநீதி தொடர்பான கட்டுரைகளை எழுதுவது எனப் பரபரப்பாக இயங்கி வருகிறார். 

கடந்த சில வாரங்களாக மீம்ஸ் கிரியேட்டர் களின் தொல்லை களால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக் கிறார். 

இது தொடர்பாக, சென்னை காவல் துறை ஆணையாளர் கரன் சின்ஹாவிடம் நாளை புகார் மனு அளிக்க இருக்கிறார்.

ஷாலினி மரிய லாரன்ஸ் ' என்னதான் பிரச்னை?' என ஷாலின் மரிய லாரன்ஸிடம் கேட்டோம். 

"டிசம்பர் மாதத்தில் இருந்தே பிரச்னை தான். அந்த நேரத்தில், 'மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வெர்சஸ் பிளாக்கர்ஸ்'

என்ற தலைப்பில் விஜய் டி.வி.யில் 'நீயா... நானா?' நிகழ்ச்சி நடந்தது. நான் பிளாக்கில் எழுதுவ தால் என்னைப் பேசுவதற்காக அழைத்தனர். 
அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது, 'பெண்களை பாலிய ல்ரீதியாக வகைப் படுத்துவதாக மீம்ஸ் போடுகின்றனர்.

இது எங்களை மிகவும் கஷ்டப்ப டுத்துகிறது' எனப் பேசினேன். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என்னுடைய வேலை களில் பிஸியாகி விட்டேன். நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, ' உன்னைக் கொலை பண்ணிடுவோம். 

மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பத்திப் பேசறதுக்கு நீ யாரு?' என ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்து கொண்டி ருந்தன.

ஒன்று இரண்டு என்றால்கூட பரவா யில்லை. ஆயிரக் கணக்கான மெசேஜ்கள் இன்பாக்ஸில் குவிந்து விட்டது. 

என்னுடைய முகத்தை வைத்து எவ்வளவு அவமான மாகப் பதிவு போட முடியுமோ, அவ்வளவு படங்களை மீம்ஸ்களாக வெளியிட்டி ருக்கிறார் கள்.

2014-ம் ஆண்டு திருநங்கை களின் நலனுக்காக பணிபுரிந்த தற்காக விருது கிடைத்தது.

 முன் பெல்லாம் என் பெயரை கூகுளில் தேடினால், அந்த விருது படம்தான் வரும். 

இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. என்னை அவமானப் படுத்தி வெளியிட்ட மீம்ஸ்கள் தான் நிறைந்து இருக்கிறது.

'சென்னை மீம்ஸ் தான்' என்ற பெயரில் இயங்கு பவர்கள் தான் இத்தனையும் செய்கிறார்கள். 

என்னுடைய ஃபேஸ்புக்கில் நந்தினி மரணத்தில் இருந்து பெண்களை பாதிக்கும் அனைத்து விவகாரங் களைப் பற்றியும் எழுதி வருகிறேன். 

இது இந்த மீம்ஸ் கிரியேட்டர் களுக்குப் பிடிக்க வில்லை. அதனால் தான் இந்தளவு க்குத் தாக்கு கிறார்கள்.

'ஷாலினி மரிய லாரன்ஸ்' என்று என் பெயரைப் போட்டு, 'இனி இருக்குடி உனக்கு' என விமர்சி த்தார்கள். 

என்னுடைய பதிவுக்குக் கீழ் கெட்ட கெட்ட வார்த்தைகளை எழுதி யுள்ளனர்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உள்ள சாதி அரசியல் பற்றி எழுதிய போது, நாம் தமிழர் கட்சி ஆட்கள் எனக்கு எதிராக எழுதினார்கள்.

சென்னை மீம்ஸ் அட்மின் கௌதம் என்னுடைய இன்பாக்ஸில் வந்து மிரட்டி விட்டுச் சென்றார்.

'பெண்களை இப்படி யெல்லாம் அவமதிப்பது எந்த வகையில் சரி? எனக் கேள்வி எழுப்பினேன். 
உடனே, இந்தப் பையன் என்னுடைய போட்டோவைப் போட்டு, ' இவள என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க' என எழுதி யிருந்தான். 

எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மக்களுக் கான பணியில் நான் வேற லெவலில் சென்று கொண்டிருக் கிறேன்.

இந்த நேரத்தில் வரதட்சணை தொடர்பாக பேசுவதற்காக 'நீயா...நானா?' கோபிநாத் அழைத்தார். 

சொத்து விவகார த்தில் சம உரிமை குறித் தெல்லாம் எனக்கு ஒரு பார்வை இருக்கிறது.

 'நீங்கள் வரதட்சணை வாங்கும் போது கஷ்டமாகத் தெரிய வில்லை. 

இந்தப் பெண்களை எப்படி இவ்வாறு பேசலாம்?' என சத்தம் போட்டுக் கத்திப் பேசினேன்.

 இந்த நிகழ்ச்சி வெளியில் வந்ததும், எனக்கு எதிராக மீம்ஸ் வேலை களைத் தொடங்கி விட்டார்கள். 

அந்த நிகழ்ச்சி யில் பேசிய மற்றவர் களை எல்லாம் விட்டு விட்டு என்னை மட்டுமே டார்கெட் பண்ணத் தொடங்கி விட்டார்கள். 

ஒரு கட்டத்தில், ' இவள ஓட ஓட வெட்டிக் கொல்லனும்' என விதம் விதமான படங்களை போட்டு வெளியிட ஆரம்பித் தார்கள். 

ஒரு பெண்ணை எந்தளவுக்கு அசிங்கமாக விமர்சிக்க முடியுமோ, அந்த எல்லை களை எல்லாம் தாண்டி விமர்சிக் கிறார்கள். 

இதைப் பற்றி கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப் போகிறேன் என்றதும், 'புகார் கொடுத்து கிழிச்சிருவியா நீ' எனப் பதில் கொடுக்கிறார்கள். 

என் பெயரை ஃபேஸ்புக்கில் எழுதினாலே, அசிங்கமான படங்கள் தான் வருகிறது. பொது வெளியில் கருத்தியல் ரீதியாக இயங்கி வருகிறேன். 

நான் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர் என்பதால் தான் இவ்வளவு தூரம் தாக்குதலை நடத்து கிறார்கள்.

ரோட்டில் போகின்ற வர்களைக் கிண்டல் செய்தாலே ஈவ் டீசிங் வழக்கில் கைது செய்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சியின் ஜோதி மணிக்குப் பிரச்னை வந்தபோது, அரசியல் ரீதியாகவும் அவருக்கு ஆதரவுக்கரம் நீண்டது.

என்னுடைய விவகாரத்தில் யாரும் ஆதரவு கொடுக்க வில்லை" என்றார் குமுறலுடன்.

ஷாலின் விவகாரத்தைக் கையில் எடுத்தி ருக்கும் எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம்.

"இணைய தளத்தில் எந்த எல்லை களும் இல்லாமல் தாக்குதல் நடத்து கின்றனர். 'ஒரு பெண் எப்படிப் பேசலாம்' என்பது தான் இவர்களின் நோக்க மாக இருக்கிறது. 


'ஒரு பெண்ணைப் போல் நடந்து கொண்டால் எங்களுக்குக் கவலை யில்லை' என ஓர் இடத்தில் குறிப்பிடு கிறார்கள்.

சாதிக் கொடுமை, வரதட்சணை ஆகிய வற்றை எதிர்த்துப் பேசினால், இது போன்ற ஆட்களுக்குப் பிடிப்ப தில்லை. 

எல்லை மீறிய ஆபாசமாக எழுது கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வைத்து, சாதியை வைத்து வன்மத்தை அரங்கேற்றுவது என்பது கண்டிக்கத் தக்கது. 

ஷாலினுக்கு நடக்கும் இதே கொடுமை தான், பத்திரிகை யாளர் கவின்மலர், காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி உள்ளிட்டவர்கள் மீதும் நடந்தது. 

மேட்டுக்குடி பெண்கள் புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கக் கூடிய அரசாங்கம்,

 அட்டவணை சமூகத்துப் பெண்கள் புகார் கொடுத்தால் மட்டும் எந்த நடவடி க்கையும் எடுப்ப தில்லை. 

இணைய சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித தாக்கு தலைக் கண் காணித்து நடவடிக்கை எடுப்ப தற்காகத் தான் சைபர் கிரைம் இயங்கு கிறது.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் தெரிய வில்லை. ஷாலின் மீதான இணையதள தாக்கு தலுக்கு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். 
அதற்கான சட்டப் போராட்ட த்தில் தீவிரமாக இறங்கியி ருக்கிறோம்" என்றார் கொந்தளிப் புடன்.

இதுகுறித்து சென்னை மீம்ஸ் கிரியேட்டர்ஸின் விளக்கம் அறிய, அவர்களைத் தொடர்பு கொண்டோம். 

"ஷாலின் மரிய லாரன்ஸ் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரிய வில்லை.

எங்கள் குழுவில் கௌதம் என்ற பெயரில் யாரும் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டனர். 
Tags: