சம்மர் விடுமுறை பெண்களுக்கும் தான் பெண்களே !

Fakrudeen Ali Ahamed
பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், 'அப்பாடா' என ரிலாக்ஸ் ஆவது குழந்தை களை விட அவர்களின் அம்மாவும் தான். 


ஏனெனில், பள்ளி நாட்களில் காலையில் குழந்தையை எழுப்பி, ஹோம் வொர்க் செய்ய வைத்து, டிபன் செய்து, பள்ளிக்கு அனுப்பி, 
மாலையில் அவர்களை அழைத்து வந்து, ஸ்கூல் டைரியில் ஆசிரியர் எழுதி தந்தவற்றைப் படிக்க வைத்து, 

சீருடை களைச் சலவைச் செய்து, சீக்கிரமே தூங்க வைப்ப தற்குள்... ஒரு நாளை கடப்பது பெண்களு க்கு எளிதல்லவே... 

அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் இரட்டைச் சுமை தான்.

குழந்தைகள் தங்களுக்கு விடப்படும் கோடை விடுமுறை யில் என்ன செய்யலாம் என்பதற்கு பல திட்டங்கள் போட்டு வைத்தி ருப்பார்கள். 

அவர்களைப் போலவே பெண்களும் கோடை விடுமுறையை செலவழிக்க திட்டம் தீட்டிக் கொள்ளலாமே... 

'குழந்தைகள் படிக்கி றார்கள் அவர்களுக்கு விடுமுறை என்பது சரி. நாங்கள் என்ன படிக்கிறோமா?' 

என்ற கேள்வி சில பெண்களு க்கு எழலாம். சில விஷயங் களை யோசித்துப் பாருங்கள்.

நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத் தன்று உங்கள் மகனுக்கு செய்முறை தேர்வு.

அதனால், திருமணத் திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டி ருக்கும். 

கிராமத்தில் இருக்கும் மூத்த குடும்ப உறுப்பினருக்கு உடல் நிலை சரி யில்லாமல் போன போது கூட பணம் அனுப்ப முடிந்ததே தவிர, 

அருகில் இருந்து ஒருவாரம் கவனித்துக் கொள்ள முடிய வில்லை என்று கவலையும் இருக்கும் சிலருக்கு. 

இப்படி ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கதை. அவற்றை யெல்லாம் சரி செய்யும் விதத்தில் திட்ட மிடுங்கள்.

தங்கள் திருமண த்திற்கு வர வில்லையே என உங்கள் மீது வருத்தமாக இருக்கும் உறவினர் வீட்டுக்கு திடீர் விசிட் அடியுங்கள். 

எதிர் பாராத பரிசு பொருளை அளியுங்கள். கிராமத்தில் இருக்கும் வயதான பாட்டி, தாத்தாக் களுடன் நிதானமாக சில நாட்களைச் செலவழி யுங்கள். 

அவர்களுக்கு மருத்து வத்தை விடவும் அன்பான உறவுகள் அருகில் இருப்பதே மகிழ்ச்சியைத் தரும்.

இவை போன்ற சூழல் சிலருக்கு நேராமல் இருந்திருக்க லாம். மேலும், உறவுகளை

தகவமைப்பு மட்டுமே தான் பெண்கள் வேலை என்று ஒதுக்கி விட முடியாது தானே. 

பெண்களு க்கு என்றும் சில விருப்பங்கள் இருக்கும். அவற்றை இந்த விடுமுறைக் காலத்தில் நிறை வேற்றிக் கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலம் பேசத் திணறியப் பழக்கம் இப்போது வரை சில பெண்களுக்கு இருக்கக் கூடும். 

அதனால், பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் பேரன்டிங் மீட்டிங்கில் பேசுவதற்கு தயக்கம் காட்டுவர். 
இந்த இரண்டு மாதங்களில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புக்குச் செல்லலாம். தன் தயக்கத்தை உடைத்து வெளியே வரலாம்.

ஆங்கிலம் அல்லாது வேறு மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வம் சிலருக்கு இருக்கலாம். 

அதற்கான பயிற்சி நேரம் காலை, மாலை என பிள்ளை களின் பள்ளி நேரத்தை ஒட்டியே இருப்ப தால் தங்கள் ஆர்வத்திற்கு அணை போட்டிருப்பர். 

இந்த விடுமுறை நாட்களை புதிய மொழியைக் கற்றுக் கொள்ள பயன் படுத்தலாம்.

ஏதேனும் இசைக் கருவி இசைக்கப் பழக, ஓவியம் வரைய உள்ளிட்ட தனித்திறன்

பயிற்சி மேற்கொள்ள விருப்ப முள்ள பெண்கள் விடுமுறை நாட்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

ஆண்களைப் போல பெண்கள் தங்கள் நட்பைத் தொடர முடிவதில்லை. முகநூல், வாட்ஸ் அப் என தொடர்பில் இருந்தாலும் 

முகம் பார்த்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு, ஏதேனும் ஓர் இடத்தில் பழைய கதைகளைப் பேசுவது போல ஆகாது. 

அந்த ஆசைகளை நிறை வேற்றும் மாதங்களாக ஏப்ரல், மே அமையட்டும்.

பெண்களில் பலருக்கும் சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வேலைக்குச் செல்லும் இடங்களில் ஏதேனும் நெருக்கடியை எதிர் கொள்ளும் பெண் களுக்கு இந்த எண்ணம் அதிகம் இருக்கும். 

லாபம் தரும் சுய தொழில் செய்ய தெரிந்தும், அதற்கான ஆயத்தப் பயிற்சி களுக்கு நேரம் கிடைக்காமல் இருப்பர். 

அவர்கள் இந்தக் கோடை விடுமுறை காலத்தை முறையாக பயன்படுத்தி, சுய தொழிலில் இறங்க முதல் அடியை எடுத்து வைக்கலாம்.

பல ஆண்டு களாக செல்ல நினைத்த சுற்றுலா தளங் களுக்குச் செல்லுங்கள். தங்களுக் கான வலிமையை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள். 

விடுமுறையை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் பெண்களே.
Tags: