உஷாரய்யா உஷார்.. பிரியாணி !

Fakrudeen Ali Ahamed
அந்த ஏரியாவில் அவர் தான் பிரபலமான பிரியாணி தயாரிப்பாளர். அவர் தயாரிக்கும் பிரியாணியை அந்த பகுதி மக்கள் விரும்பி சுவைப் பார்கள். 
உஷாரய்யா உஷார்.. பிரியாணி
முதலில் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு பிரியாணி தயார் செய்து கொடுக்கும் சமையல் காரர் போல் வாழ்க்கையை தொடங்கிய அவர், 
 
பின்பு மக்களிடம் கிடைத்த வரவேற்பால் அந்த பகுதியில் பிரியாணிக் கென்றே தனியாக ஒரு ஓட்டலை யும் அமைத்தார். அந்த ஓட்டலில் மதிய நேரங் களிலும், வார இறுதி நாட்களிலும் கூட்டம் அலைமோதும்.

சத்து நிறைந்த வெள்ளை பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி?

பொதுவாக ஒருவர் பிரியாணி வியாபார த்தில் கொடிகட்டி பறக்கிறார் என்றால், உடனே அவருக்கு போட்டியாக ஒன்றிரண்டு பேர் உருவாகி அருகருகே ஓட்டல் தொடங்கி விடுவார்கள்.

இவருக்கு மட்டும் அப்படி தொழில் எதிரிகள் யாரும் இல்லை. எல்லோரு க்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார்.

அந்த பகுதியில் யார் வீட்டில் விசே‌ஷம் என்றாலும் இவருக்கு முதலிலே தெரிந்து விடும். உடனே அந்த வீட்டில் போய் ஆஜராகி விடுவார்.
அவர்கள் சைவ சாப்பாடு போடும் எண்ணத்தில் இருந்தாலும், சாதுரியமாக பேசி அவர்களை பிரியாணிக்கு சம்மதிக்க வைத்து விடுவார். அந்த பகுதியில் உள்ள கல்யாண மண்டபங்களில் எல்லாம் அவரது பிரியாணியே பரிமாறப்பட்டது.

500 பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்தால் அதை விட ஆட்கள் நிறைய வந்து விடுவது வாடிக்கையாக இருந்தது. 
 
இப்படி அவர் பிரியாணி சப்ளை செய்யும் பல இடங்களில் பிரியாணியின் தேவை அதிகரித்துக் கொண்டே இருந்தது.  அதை விசே‌ஷ நிகழ்ச்சிகள் நடத்திய ஒருசிலர் கவனிக்கத் தொடங்கினார்கள். 

அப்பாவின் மரண பயம்... அப்பாவை மனநல மருத்துவரிடம் அழைத்து போ.. நெக்ரோபோபியா !

திருமண நிகழ்ச்சிகளில் இரு வீட்டார் என்ற போர்வையில் கிட்டத் தட்ட அறிமுகம் இல்லாத 100 பேர் வரை வந்து சாப்பிட்டு செல்வதை கண்டு பிடித்தார்கள்.
அன்று ஒரு கல்யாண வீட்டு வரவேற்பு நிகழ்ச்சி. 1000 பிரியாணிக்கு ஆர்டர் செய்திருந்தார்கள். நிறைய பேர் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந் தார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வீடியோவில் படமாக்கினார்கள். பிரியாணியின் தேவை அதிகரித்துக் கொண்டிருந்தது.

பற்றாக் குறையோடு ஒரு வழியாக பந்தி முடிந்தது. பிரியாணிக்காரர் அட்வான்ஸ் தொகை போக மீதமுள்ள பணத்தை கேட்க, இரண்டு நாட்கள் அவரிடம் அவகாசம் கேட்டார்கள்.

அந்த அவகாசத்தை பயன்படுத்தி ஏற்கனவே அந்த பகுதியில் அவர் பிரியாணி சப்ளை செய்த நிகழ்ச்சிகளில் சாப்பிட்ட வர்களின் வீடியோவையும், இங்கே சாப்பிட்டவர்களின் வீடியோவையும் ஓட விட்டு பார்த்தார்கள்.

கிட்டத் தட்ட 100 பேர் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வருகை தந்து, சாப்பிட்டதை கண்டுபிடித்தார்கள். 
 
அவர்களில் பத்து, பதினைந்து பேரை தெரிந்தவர்கள் மூலம் அடை யாளம் கண்டு, ‘அவர்கள் எப்படி எல்லா விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கும் வருகிறார்கள்?

ஆயுள் சிறை என்றால் என்ன? எத்தனை வருடம் சிறையில் இருக்க வேண்டும்?

அவர்களுக்கு தகவல் தெரிவிப்பது யார்? பிரியாணி பரிமாறுகிறவர்களிடம் அவர்கள் எப்படி சகஜமாக பழகுகிறார்கள்?’ என்பதை எல்லாம் விசாரித்தார்கள். அவர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.

அந்த அதிர்ச்சியை போலீசிடம் தெரிவித்து, பிரியாணிக்காரரை போலீஸ் நிலையத்தில் கொண்டு போய் உட்கார வைத்தார்கள். போலீஸ் அதிகாரி தீர விசாரித்த போது கூடுதல் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.
பிரியாணி ஆர்டர் எடுக்கும் அந்த ஓட்டல் காரர் தான் சுற்றுப் பகுதியில் உள்ள 200 பேர்களை இணைத்து ஒரு ‘நெட்ஒர்க்’ வைத்திருப்பது தெரிந்தது.

தான் பிரியாணி ஆர்டர் எடுத்ததும், அந்த நெட்ஒர்க்கில் இருப்பவர்களிடம் தெரிவித்து, விசே‌ஷ நிகழ்ச்சி நடக்கும் இடம் – நாள் – நேரம் போன்ற தகவலை தெரிவித்து விடுகிறார்.

அவர்கள் சரியான நேரத்திற்கு வந்து சாப்பிட்டு விட்டு, ‘பிரியாணி ரொம்ப சூப்பர்’ என்று பலரு க்கும் கேட்கும் விதத்தில் பாராட்டி விட்டு கிளம்பிச் சென்று விடுவார்கள்.

அது மட்டுமின்றி பிரியாணிக்கான விலையில் நாலில் ஒரு பகுதியை, ஓட்டல்காரரை தனியாக சந்தித்து கொடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். 

வீட்டில் உள்ள அரிசி சோற்றை வைத்து சூப்பராக ஒரு பலகாரம் செய்யலாம் வாங்க !

இப்படியே கனஜோராக இந்த ‘தொழில்’ பல வருடங்களாக, பக்கத்து மாநிலத்து பெரு நகரம் ஒன்றில் நடந்தி ருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக் கிறது.

கடன் வாங்கி கல்யாணம் பண்ணும் பல ஏழைக்குடும்ப பட்ஜெட்டுகளும் இதனால் எகிறியிருக்கிறது. அங்கே நடந்தது இங்கேயும் நடந்திடக்கூடாது பாருங்க..!
Tags: