உதடுகளில் ஏற்படும் கருமையான நிறத்தை போக்க !

Fakrudeen Ali Ahamed
உதடுகள் சருமத்தை விட எளிதில் கருப்பாகி விடும். ஆனால் எளிதில் போகாது.

அதே போல் மிக மெல்லிய சருமம் இருப்பதால் எளிதில் வெடிக்க ஆரம்பித்து விடும்.

குளிரோ வெயிலோ, சருமத்தை காட்டிலும் உதடுகள் வெடிக்க ஆரம்பித்து விடும்.

லிப்ஸ்டிக் போட்டு நமது உதட்டின் கருமை மறைத் தாலும், லிப்ஸ்டிக் இல்லாமல் வெளியே வர முடியாத நிலைமை க்கு வந்து விடுகிறோம்.

லிப்ஸ்டிக் போடுவதால் அதிலுள்ள கெமிக்கல் உதட்டை இன்னும் கருப்பாக்கி விடுகிறோம்.

உங்கள் உதட்டை மென்மை யாக்கி மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.

ஆனால் தொடர்ந்து நீங்கள் இயற்கை யான பொருட்களை உங்கள் உதட்டிற்கு உபயோகி த்து வந்தால்,

சிவந்த நிறத்தில் மிருதுவான உதடுகள் கிடைத்து விடும். எப்படி என பார்க்க லாமா?

ஸ்க்ரப் செய்யுங்கள் :

சருமத்தி லுள்ள துவா ரங்கள் மூலமா கவும், வியர்வை மூல மாகவும் அழுக்களை வெளி யேற்றி விடலாம். ஆனால் உதடுகளில் வியர்ப்பது இல்லை. 

எனவே இறந்த செல்கள் வெளியேற வாய்ப் பில்லை. வாரம் இருமுறை சர்க்கரை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் 1 தேனை கலந்து உதட்டை தேயுங்கள்.

இதனால் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு சொர சொரப்பு போய், மிருது வாகும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறில் ஒரு பஞ்சை நனைத்து உதட்டில் தினமும் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். ஒரே வாரத்தில் கருமை மறைந்து பளிச்சிடும்.

ரோஜா இதழ் :

ரோஜா இதழை பேஸ்ட் போல் மசித்து அதனுடன் தேன் கலந்து உதட்டில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது வறண்ட உதட்டிற்கு நல்ல பலனைத் தரும்.

மாதுளை :

மாதுளையில் நிறைய ஆன்டி ஆக்ஸி டென்டுகள் உள்ளன. இதிலுள்ள நிறமிகள் உதட்டிற்கு சிவந்த நிறத்தை தருகிறது.

கருமையை போக்கி விடும். மாதுளையை அரைத்து அதனை உதட்டிற்கு பூசி வரலாம். 

அல்லது மாதுளை சாறினை இரவு தூங்கும் முன் பூசி வாருங்கள். தினமும் பூசி வந்தால் மாதுளை யின் நிறத்திற்கு உங்கள் உதடுகள் மாறும்.

குங்குமப் பூ :

குங்குமப் பூவை பொடி செய்து அதனை ஒரு துளி நீரில் ஊற விடுங்கள்.

ஊறியபின் அந்த நீரை எடுத்து உதட்டில் பூசுங்கள். லிப்ஸ்டிக் தோற்று போகும் . தினமும் பூசி வாருங்கள் உதடுகள் சிவப்பேறி விடும்.


பீட்ரூட் :

தினமும் இரு வேளை பீட்ரூட் சாறை எடுத்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் சிவந்து, மென்மை யாக மாறும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸி டென்டுகள் உதட்டில் உண்டாகும் பாதிப்பு களை சரி செய்கின்றன.
Tags: