கருமையான கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங் கண்ணி தைலம் !

Fakrudeen Ali Ahamed
கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலா ங்கண்ணி இது கேச பாதுகாப் புக்கும் கவசமாக விளங்கு கிறது.

கரிசலாங் கண்ணியின் கலக் கல் பலன்கள் கார்மேகக் கூந்தலில் உலா வர விரும்புகிற வர்களுக்கு கரி சலாங் கண்ணி சாறு தைலம்,

ஒரு வரப் பிரசாதம்! கரிசலாங் கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள் ளுங்கள். 

இந்த சாறு & 3 கப், கீழா நெல்லி இலை சாறு & 1 கப், பொன்னாங் கண்ணி இலை சாறு & 1 கப், எலுமிச்சை சாறு & 1 கப்…

இவற்றை 6 கப் நல்லெண் ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள்.

‘சடசட’வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காய வைத்த நெல் லிக்காய் பவுடர் & 10 கிராமை இதில் போடுங்கள். பிறகு, அடுப்பை அணைத்து விடுங்கள். 

இந்தத் தைல த்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி ‘கருகரு’ வென்று வளரத் தொடங்கும்.
பேன் மற்றும் பொடுகினால் அவதிப் படுகிறவர் களுக்கான ஸ்பெஷல் கரிச லாங் கண்ணி தைலம் இது.

பச்சை கரிசலாங் கண்ணி இலை இடி த்தசாறு & 2 கப், அருகம்புல் சாறு & 2 கப், தேங்காய் எண்ணெய் & 2 கப்…

இவற் றுடன் 1 கப் தேங்காய்ப் பால் கலந்து, ஒரு பாத்திரத் தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணு ங்கள்.

நீர்ப் பதம் போய் தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள். 

தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்தத் தைலத்தைத் தேய்த்து வாருங்கள்.

இது பொடுகை யும் பேனையும் ஓட ஓட விரட்டியடிப் பதால், தலை சூப்பர் சுத்தமாகி விடும். ‘என்னென் னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன்.

இந்த முடி கொட்டு வது மட்டும் நிற்க மாட்டேன் என்கி றதே’ என்று கவலைப் படு கிறவர்களை சந்தோஷப் படுத்துகிறது,

இந்த கரிசலா ங்கண்ணி எண்ணெய்… இரும்பு வாணலியை அடுப்பில் வையு ங்கள். 

அது நன்றாகக் காய்ந் ததும் 1 கப் கரிசலாங் கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள்.

ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டை பொடி, 5 கிராம் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள்.

இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும்.

பள்ளி செல்லும் குழந்தை கள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவி னாலே போதும்.

இளநரை வராமல் தடுக்கிற அற்புத சக்தி கரிசலாங் கண்ணியில் இருக் கிறது.

கரிசலாங் கண்ணி இலை, கறிவேப்பிலை இரண் டையும் தனித் தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள்.

இது இர ண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் எலுமி ச்சை சாறு & 1 டீஸ்பூன், தயிர் & 1 டீஸ்பூன் கலந்து கொள்ளு ங்கள்.


இதைத் தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசு ங்கள். வாரம் 2 முறை இந்த ‘பேக்’ போட்டு குளித்து வந்தால்,

இளநரை பக்க த்திலேயே வராது. சிலருக்கு தலையில் ஆங்காங்கே வழுக்கை விழுந்து தோற்றம் பொலி விழந்திருக்கும். 

வழுக்கை யைப் போக்கி, கேசத்தை செழிப் பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங் கண்ணியின் தனித்துவம்!

 செம்பருத்தி பூ & 1 கப், கரிசலாங் கண்ணி இலை & 1 கப்… இரண் டையும் 2 டீஸ்பூன் நல்லெண் ணெய் ஊற்றி வதக்குங்கள்.

இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டு ங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண் ணெய் கலந்து

தண்ணீர்ப் பதம் போகும் வரை.. அதாவது சுமார் 10 நாட்கள்.. வெயிலில் வைத்து எடுங்கள். 

இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். செம்ப ருத்தி, வழுக்கை ஏற்படு வதைத் தடுக்கும்.

கரிசலாங் கண்ணி, வழுக் கை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும்.
Tags: