தாய் மகனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்

Fakrudeen Ali Ahamed
குழந்தைகள் வளர வளர, மகன் என்றால் தந்தை யிடம் அதிக நெருக்கம் காண்பிப் பான் என்றும் 


மகள் என்றால் தாயிடம் அதிகம் நெருக்கம் காண்பிப் பாள் என்றும் பலரும் கருதி வருகின்றனர்.

இருப்பினும், இந்த நம்பிக்கை க்கு மாறாக, தாய் மார்களும் மகன் களும் ஒரு விசேஷ பந்தத்தை பகிர்ந்து கொள்கின் றனர்.
மகன்கள் தங்கள் தந்தையை முன் மாதிரியாக கருதி வளர்ந் தாலும், அவர்கள் தங்களின் தாயின் சொல்லை தான் அதிகமாக கேட்பார்கள். 

குழந்தை களை வளர்க்கும் தாய் தான் குழந்தை களின் நேசத்திற்கு அதிகமாக ஆளாகி றவர்கள்.

மகன்களை வளர்ப்பதி லும் மகள்களை வளர்ப்பதி லும் சாற்றி வித்தி யாசங்கள் உள்ளன.

அதற்கு காரணம், ஆண்களின் சிந்தனை, விருப்பங்கள் மற்றும் நடத்தை முறைகள் பெண் களிடம் இருந்து வேறுபாடும். 

பெரும் பாலான பையன்கள் தங்களின் 5 வயது முதலே மிகவும் குறும்புத் தனத்துடன் துறு துறுவென இருப்பார்கள். 

அதனால் அவர்களை வளர்ப்பதில் தாய் மார்கள் தங்களை தாங்களே தயார் படுத்திக் கொள்ள வேண்டி வரும்.

வளரும் பையன் களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன; குறிப்பாக இந்த கால கட்டத்தில், 

அதாவது பாலினத்தை ஒரு காரணமாக காட்டாமல் நாம் அனைவரும் முன்னோக்கி நடக்கும் நேரத்தில்.

அதனால் ஒரு தாயாக, உங்கள் பையனுக்கு 18 வயது முடிவடை வதற்குள் அவனுக்கு

நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய மான விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாமா!

சமையலறை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல:

ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு பாலின சமத்துவ த்தை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். 

அதே போல், சமையல் மற்றும் வீட்டு வேலைகள் என்பது பெண் களுக்கு மட்டுமே என்ற

 சில மாறா நிலையான கருத்துக் களை அவர் மனதில் தகர்த் தெறிய முயற்சி செய்ய வேண்டும்.

அடிப்படை சமையல் ஆற்றல்கள்:

உங்கள் மகனுக்கு 12 வயது தொடங்கியது முதலே, அவனுக்கு நீங்கள் அடிப்படை சமையல் ஆற்றல் களை கற்றுக் கொடுக்க தொடங் குங்கள். 

சமையல் என்பது ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை ஆற்ற லாகும்.

உடல் வன்முறையை தவிர்த்தல்:

எந்த ஒரு சூழ்நிலை யிலும் உடல் ரீதியான வன்முறை என்பது கண்டிப் பாக தவறு என்பதை ஒரு தாய் தன் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

பெண்களை மதித்தல்:

பெண்களிடம் எப்படி மாற்றி யாதையுடன் நடந்து கொள்வது மற்றும் அவர்களை எப்படி சரிசமமாக பார்ப்பது 

என்பதை பற்றி தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கிய மாகும்.

உணர்ச்சியை வெளிப் படுத்துவதில் தவறில்லை:

பெரும் பாலான பெற்றோர்கள் தங்கள் மகன்கள் அழும் போதோ அல்லது உணர்ச்சி களை கொட்டும் போதோ அவர்களை கடிந்து கொள்வார்கள். 

இப்படி செய்வதால் அவர்களின் வாழ்க்கையில் பின்னாட்களில் உளவியல் ரீதியான கோளாறுகள் ஏற்படலாம். 

தன் உணர்வு களை கொட்டி தீர்க்க வேண்டும் என்னும் பொது அழுவது ஒன்றும் தவறில்லை என்பதை உங்கள் மகன் தெரிந்து கொள்ளட்டும்.

அன்பின் முக்கியத்துவம்:
பல நேரங்களில், பையன்கள் என்றால் ஆஜானு பாகுவான முரட்டுத் தனுடன் இருக்க வேண்டும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது. 

ஆனால் பிறரிடம் எப்படி அன்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு தாய் தன் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கிய மாகும்.

அடிப்படை வாழ்க்கை ஆற்றல்கள்:

சமயலுடன் சேர்த்து, வீட்டு வேலைகள், கருவிகளை கொண்டு வேலை செய்தல், முதலுதவி

போன்ற பிற வாழ்க்கை ஆற்றல் களையும் ஒரு தாய் தன் மகனுக்கு கற்றுத் தர வேண்டும்.
Tags: