கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க !

Fakrudeen Ali Ahamed
பலூன் போல அழகாக உப்பிய கொழு கொழு கன்னங்கள்... பார்த்தவுடன், அவற்றைச் செல்லமாக ஒரு கிள்ளு போட வேண்டும் என்று நமக்கு தோன்றுமா இல்லையா? 
நிச்சயமாக! அந்தக் கொழுத்த கன்னங்கள் ஐந்து வயதுக்குட் பட்ட குழந்தை களுக்கு இருந்தால் பிரச்னை இல்லை. ரசித்து, கிள்ளி நகை யாடலாம் தான். 

ஆனால், பெரியவர் களுக்கு கன்னங்கள் உப்பி, மாங்கனியைப் போல தசைகள்

தொங்கிக் கொண்டு இருந்தால், ரசிக்க முடியுமா... செல்லமாகக் கிள்ளித்தான் விளையாட முடியுமா? 

அதோடு, இப்படி தேவை யில்லாமல் கன்னச் சதை வீங்கி இருப்பது உடலுக்குத் தீங்கை விளை விக்கக் கூடியது.

இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்கள், மனதளவில் சுருங்கிப் போவார்கள்;  என்ன பிரச்னையோ என்று கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதற்காகக் கவலைப்படத் தேவை யில்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் சில பயிற்சிகள் செய்தால் போதும்... 

முகத்தில் உள்ள தேவையற்ற தசைகள் கரைந்து, காணாமல் போய் விடும். அந்தப் பயிற்சி களைப் பார்ப்போம்.

உதட்டைக் குவித்து கூப்புதல்!

இது கன்னங் களுக்குத் தரும் சிறந்த பயிற்சியாக அமையும். இதனால் கன்னங்கள் பொருத்த மான வடிவம் பெறும்.

* இரு கன்னங் களையும் சப்பையாக வைத்துக் கொள்ளவும். உதட்டைக் கூப்பிக் கொள்ளவும்.

* 30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு, உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

* பின்னர் உதடுகளை விடு விடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும்.

* இதே போல தொடர்ந்து காலையும், மாலையும் பத்து முறை செய்ய வேண்டும்.

கன்னங்களில் காற்று விளையாட்டு!

இந்தப் பயிற்சி நமது கன்னங் களையும், தாடை களையும் உறுதியோடு வைத்திருக்க உதவும்.

* வாய்க்குள் காற்றை இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும். இரு உதடுக ளையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்து, காற்றை நன்கு அடக்கிக் கொள்ள வேண்டும்.

* பிறகு காற்றை ஒருபுறக் கன்னத்தில் இருந்து மறுபுற கன்னத்துக்கு மாற்ற வேண்டும். இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.

* தினமும் ஐந்து நிமிடங் களுக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மூச்சைப் பிடி... விடு

மூச்சைப் பிடி... விடு!

இந்தப் பயிற்சி கன்னத் தசைகளுக்கு வலுவை ஏற்படுத்த உதவும்.

* மூச்சை நன்றாக இழுத்துக்கொள்ள வேண்டும்.

* பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை விட வேண்டும்.

* தினமும் காலை, மாலை என நான்கு முறை தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

வானத்துக்கு முத்தம்!

இந்தப் பயிற்சி தொண்டையை வலுப்படுத்த உதவும். இதைச் செய்வதால் குரலும் வலுப்பெறும்.

* தலையைப் பின்னால் சாய்த்து அண்ணாந்து பார்க்க வேண்டும்.

* இப்படிப் பார்ப்பதால், தொண்டைப் பகுதி நீளமாகக் காணப்படும்.

* உதட்டைக் குவித்து, வானத்துக்கு முத்தம் கொடுப்பதைப் போல வைத்துக் கொள்ள வேண்டும்.

* இதே நிலையில் உதடுகளை பத்து நிமிடங்கள் வரை குவித்து வைத்திருக்க வேண்டும். பிறகு மெதுவாக உதடுகளை விடுவிக்க வேண்டும்.

* பத்து முறை மீண்டும் மீண்டும் இப்படிப் பயிற்சி செய்ய வேண்டும்.

புன்னகை உதவும்!

இந்தப் புன்னகைப் பயிற்சி இறுக்கமாக உள்ள முகக் கொழுப்பு களைக்கூட குறைக்க உதவும்.

* கன்னங்களைச் சுற்றி எண்ணெயைத் தடவ வேண்டும்.

* பின்னர் கன்னங்கள் அகலும் அளவுக்கு உதடுகளை விரித்துச் சிரிக்க (சிரிப்பது போல வைத்திருக்க) வேண்டும்.

* பத்து நிமிடங்கள் வரையில் உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

* பிறகு கன்னங் களை விடு விக்காமல் புன்னகையை மெதுவாக நிறுத்தி, உதடுகளை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

* ஒரு நாளைக்கு ஐந்து முறை இந்தப் பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்.

நமது முகத்தில் 5௦-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. இந்தப் பயிற்சி களைச் செய்தால்,

தேவை யில்லாத கொழுப்பு களால் ஏற்படும் தசைகளை எளிதாகக் காணாமல் அடிக்கலாம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!
Tags: