உதட்டுல் உள்ள சுருக்கம் மறைய? படியுங்கள் !

Fakrudeen Ali Ahamed
வயதாவ தால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இவற்றில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது.
இதன் தாக்க த்தில் இருந்து சற்று தப்பிக்க இங்கே சில எளிய முறைகள் கொடுக்கப் பட்டுள்ளது.

வயதாவ தால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இவற்றில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. 

ஆனால், இவை ஏற்பட்டால் இதன் அதிகப் படியான தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க இங்கே சில எளிய முறைகள் கொடுக்கப் பட்டுள்ளது. 

இந்த முறைகள் அனைத்தும் நாம் அன்றாடம் நம் வீடுகளில் உபயோ கிக்கும் பொரு ட்களை வைத்தே செய்யச் கூடியதாகும்.

ஆனால், இவற்றால் அவதிபடும் பெண்கள் பலர் இதனை சரி செய்ய மருத்து வரை அணுகி சில அறுவை சிகிச்சை செய்வதே வழி என்று நினைத்துக் கொண்டிரு க்கின்றனர். 

இவை அனைத்தும் சரியாக தான் இருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா. அவை வேறு சில பிரச்சனை களையும் உண்டு செய்யலாம். 

எனவே நாம் வீட்டு வைத்திய முறைகளை மேற் கொண்டு சரி செய்தால் அது மிகவும் சிறந்தது தானே.

இங்கே கொடுக்கப் பட்டுள்ள வைத்திய முறைகள் நம் உதடுகளில் உள்ள சுருக் கங்களை நீக்கி சருமத்தை சீராக்குவது மட்டு மல்லாது 

உதடுகளில் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படு த்தவும் உதவுகிறது. 

இங்கே கூறப் பட்டுள்ள முறைகளை தினமும் செய்து வந்தால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும். 

வாருங்கள் இப்போது உதட்டு சுருக்கத்தை நீக்க 10 எளிதான பாட்டி வைத்திய முறைகளை பார்ப்போம்…

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சுருக்கங் களை நீக்குவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை உங்கள் உதட்டில் தினமும் தேய்த்து வாருங்கள். 

இது உங்கள் உதட்டில் ஈரப்பத த்தைத் தக்க வைத்து சுருக்கங் களுடன் போராடி சரி செய்ய உதவு கிறது.

இலவங்கப் பட்டைப் பொடி

இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து அந்தக் கலவையை உதட்டின் மீது தடவ வேண்டும். 

10 நிமிடம் அதனை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். 

இது மிக பழைய வீட்டு வைத்திய முறை களில் உதட்டு சுருக்க த்தைப் போக்க பயன் படுத்தும் முறை யாகும்.

கற்றாழை ஜெல்

தினமும் 2 முறை இந்த கற்றாழை ஜெல்லை உதட்டில் சுருக்க ங்கள் உள்ள இடத்திலும் அதனை சுற்றி உள்ள பகுதிக ளிலும் தேய்த்து வர வேண்டும். 

இது உதட்டு சுருக்க த்தை விரட்டி யடிப்பதில் சிறந்து விளங்கு கிறது. 

வைட்டமின் ஈ எண்ணெய் 
காப்ஸூல் களில் இருந்து எடுக்கப் பட்ட எண்ணெயை உதட்டின் மீது தடவி 15 நிமிடம் ஏற வைக்க வேண்டும். 

பின்னர் கழுவி விட வேண்டும். இந்த இயற்கை வைத்திய முறையை தினமும் செய்து வர வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் உதட்டில் உள்ள சுருக்கங் களைப் போக்கு வதில் மிகச் சிறந்து விளங்கு கிறது. 


ஓட்ஸை ஒரு பேஸ்ட் போல சிறிது நீர் சேர்த்து கலந்து அதனை உதட்டின் மீது தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.

பப்பாளி

உதட்டு களில் சுருக்கம் இல்லாமல் காக்க உதவுவதில் பப்பாளி சிறந்து செயல் படுகிறது. 

இது உதட்டில் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படுத் துகிறது. 

சிறிது பப்பாளி பழத்தை எடுத்து மசித்து அதனை உதட்டின் மீது தேய்த்து 2 முதல் 3 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

உதட்டில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து அதனை சுத்தம் செய்து விடுங்கள். 

இதனை தொடர்ந்து செய்வ தால் உதட்டில் உள்ள சுருக்கம் மறை வதுடன் அவை அடிக்கடி வராமலும் தடுத்து விடும்.

அன்னாச்சி பழ ஜூஸ்

உதட்டுச் சுருக்கத்தை விரட்டு வதில் அன்னாச்சி பழ ஜூஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

இந்த ஜூஸை உதட்டின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இது பழமை யான முறைகளில் சிறந்த ஒன்று.

சர்க்கரை ஸ்க்ரப்
எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரையை சேர்த்து அதனை உதட்டின் மீது தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 

இதனை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும். குறிபிட்ட காலத் திற்கு இதனை தொடர்ந்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர்

ஒரு நாள் முழுவதும் ரோஸ் வாட்டரை உதட்டின் மீது தடவி வந்தால், உதடானது சுருக் கங்கள் இல்லாமல் அழகாகத் தெரியும். 

குறிப்பாக நீங்கள் தூங்கப் போவதற்கு முன் இதனை தடவி தூங்குங்கள். இரவு நேரத்தில் இது சிறப்பாக செயல்படும்.
Tags: