ஆண்களின் சருமத்தை பாதுகாக்க !

Fakrudeen Ali Ahamed
சருமத்தை பொருத்த வரை அதன் பராமரிப்பு பெண் களுக்கே உரியது என்ற கருத்து முக்கால் வாசி ஆண்களிடம் நிலவுகிறது.
ஆண்கள் அதிக பட்சமாக எப்போதாவது சென்ட்டும், தினசரி ஷேவிங் கிரீமும் தான் பயன் படுத்து கின்றனர்.

ஆண்கள் சருமம் பெண்களின் சருமத்தை விட 20 லிருந்து 30% தடிமனானது.

இதனால் சுருக்கம் விழுவது குறைவு. உடலில் முடி அதிகம் இருப்பதால் அதிக எண்ணை சுரக்கிறது.

எனவே ஆண்களின் முகத்தில் எண்ணைப் பசை அதிகமாக இருக்கும். இதனால் பெண்கள் அளவு ஆண்களின் முகம் முதிர்ச்சியடை வதில்லை.

தவிர முகக்ஷவரம், இறந்த சரும செல்களை உடனே நீக்கி விடுவதால் முகம் இளமை யாக இருக்கும்.

இந்த அனுகூலங்கள் இருந்தும் ஆண்களின் சருமமும் பருக்கள், மருக்களால் பாதிப்படை கின்றன.

சரும புற்று நோய்களுக்கு ஆளா கின்றனர். எளிய முறை களில் ஆண்கள் சரும பாதிப்பு களை சமாளிக்க லாம்.

வெய்யிலில் அலைவதை தவிர்த்தாலே போதும். சூரிய ஒளியின் அல்ட்ரா – வயலட் கதிர்கள், தோலுக்கு பாதிப்பை உண்டாக்கும்.

தோல்வுற்று நோய்க்கும் காரணம் அல்ட்ரா வயலட் கதிர்கள் தான்.

எனவே வெய்யிலில் அலைவதை தவிர்க்க முடியா விட்டால், ஆண்களும் பெண்களைப் போல்

சன் ஸ்கிரீன் கிரீம் (அ) லோஷனை பயன் படுத்த வேண்டும். இந்த கிரீம்களில் அளவு இருக்க வேண்டும்.
எஸ்பிஎஃப் என்றால் சன் புரெடக்சன் ஃபேக்டர். எஸ்பிஎஃப் – 15 என்றால் 75 நிமிடம் நமது தோலை வெய்யி லிருந்து பாதுகாக்கும். தொப்பி அணிவதும் நல்லது.

ஆண்களின் சரும பாதுகாப்புக்கு சோப்பே போதுமானது. மிகவும் எண்ணைப் பசை உள்ளவர்கள் வேண்டு மானால் அஷ்ரிடெஜன்ட் லோஷன் களை உபயோகிக் கலாம்.

முகக்ஷவரத் திற்கு பின் ஆண்கள் பயன் படுத்தும் ஆஃப்டர் சேவ் லோஷன் களால் பெரிதாக பலன்கள் ஏதும் இல்லை என்கின்றன சரும நிபுணர்கள்.

விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது. 
Tags: